×

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 11 பேர் பலி

படாங்: இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடித்துச்சிதறி 11 பேர் பலியானார்கள். இன்னும் 12 பேரை காணவில்லை. இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை 2900 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு மலை ஏறும் 75 பேர் கடந்த சனிக்கிழமை மலை ஏறினார்கள். அப்போது திடீரென மராபி எரிமலை வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ 3 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு பரவியது. இதில் மலை ஏறிய 75 பேர் சிக்கித்தவித்தனர். இதில் 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். 11 பேர் பலியானார்கள். 12 பேரை காணவில்லை. மற்ற அனைவரும் பத்திரமாக கரை சேர்ந்தனர். உள்ளூர் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள்.

The post இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Indonesia ,volcano eruption ,Batang ,Marabi volcano ,Marabi ,Dinakaran ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…