×

மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் 3 மாநிலங்களின் முதல்வர்கள் யார்?: பா.ஜ முகாமில் அதிகரிக்கும் பரபரப்பு

புதுடெல்லி; மத்தியபிரதேசம்,சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களின் புதிய முதல்வர்கள் யார் என்பது குறித்து பா.ஜ முகாமில் ஆலோசனை நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பா.ஜ வெற்றி பெற்றது. 3 மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் பெயரை பா.ஜ முன்னிறுத்தாமல் தேர்தலை சந்தித்தது. தற்போது 3 மாநிலங்களிலும் புதிய முதல்வர்கள் யார் என்பது குறித்துபா.ஜ முகாமில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் முதல்வர் தேர்வு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு தற்போதைய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், பா.ஜ தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, ஒன்றிய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா,நரேந்திர சிங் தோமர் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசந்துரா ராஜே, ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலக பா.ஜ தலைவர் சிபி ஜோஷி, தியா குமாரி, மஹந்த் பாலக்நாத் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ராமன் சிங் , மாநில பாஜ தலைவர் அருண் குமார் சாவ், தற்போதை சட்டப்பேவை எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கவுசிக், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஓபி சவுத்ரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

வசந்துராவை சந்தித்த 25 பாஜ எம்எல்ஏக்கள்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 199 இடங்களில் 115 இடங்களை கைப்பற்றி பா.ஜ ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சுமார் 25 பாஜ எம்எல்ஏக்கள் நேற்று முன்னாள் முதல்வர் வசந்தரா ராஜேவை சந்தித்தனர்.

மபி, ராஜஸ்தானில் காங். இன்று ஆலோசனை
ராஜஸ்தான் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 69 பேர் வெற்றி பெற்றனர். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் காலை 11 மணிக்கு நடக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் ெதரிவித்துள்ளார். இதற்கிடையே மபியில் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் 3 மாநிலங்களின் முதல்வர்கள் யார்?: பா.ஜ முகாமில் அதிகரிக்கும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mabi ,Chhattisgarh ,Rajasthan ,chief ministers ,BJP ,New Delhi ,Madhya Pradesh ,
× RELATED மபியில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி