×

தாண்டவம் ஆடுகிறது மிக்ஜாம் புயல்: பழவேற்காடு மீனவ கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர்


பொன்னேரி: மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கோர தாண்டவமாடி வருகிறது. இதனால் பழவேற்காடு மீனவ கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடா கடலில் மிக்ஜம் புயல் நிலைகொண்டுள்ளதன் எதிரொலியாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பழவேற்காடு கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் லைட்ஹவுஸ் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தனித்தீவாக காட்சியளிக்கிறது. வெள்ளம் புகுந்தால் மீனவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பழவேற்காடு கடல் பகுதியில் புயல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக, பலத்த சூறைக் காற்று வீசியதால் அங்கு கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதனால் பழவேற்காடு லைட்ஹவுஸ் பகுதியே தனித்தீவாக மாறியுள்ளது. இதற்கிடையே, பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டால், அங்கு வெளியேறும் உபரிநீர் ஆரணியாற்றின் வழியாக பழவேற்காடு பகுதிக்கு வரும்போது மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அப்பகுதி மீனவ மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, ஆரணியாற்றின் கடைசி அணைக்கட்டான ஆண்டார்மடம் பகுதியை தாண்டி வெள்ளநீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆண்டார்மடம் பகுதிக்கும் பழவேற்காட்டுக்கும் இடையிலான சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கடைமடை பகுதிக்கு வராத சூழலில், மேலும் அங்கிருந்து அதிகளவில் வெளியேறும் வெள்ளநீரின் அளவு அதிகரித்து, பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

The post தாண்டவம் ஆடுகிறது மிக்ஜாம் புயல்: பழவேற்காடு மீனவ கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர் appeared first on Dinakaran.

Tags : THANDAWAM ,MIKJAM STORM ,BONNERI ,MIKJAM ,STORM ,CHENNAI ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன்...