×

கேரளா நிதி அமைச்சரை எதிர்த்து மனைவி போராட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் பாலகோபால். இவரது மனைவி ஆஷா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் கேரளாவிலுள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது தான் சம்பள உயர்வு வழங்காததற்கு காரணம் என்று கேரள நிதியமைச்சர் பாலகோபால் கூறினார்.

ஆனால் கேரள அரசு முறையாக விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று ஒன்றிய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் கடந்த 39 மாதங்களாக ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்று கூறி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் கேரள கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் அமைச்சர் பாலகோபாலின் மனைவி ஆஷாவும் கலந்து கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். கணவர் பொறுப்பு வைக்கும் நிதித்துறையை கண்டித்து அவரது மனைவியே போராட்டம் நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கேரளா நிதி அமைச்சரை எதிர்த்து மனைவி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Finance ,Thiruvananthapuram ,Balakopal ,Asha ,Dinakaran ,
× RELATED கடன் வரம்பை உயர்த்தக்கோரி கேரள அரசு...