×

3 எம்பிக்கள் தோற்றாலும் தெலங்கானாவில் பா.ஜ 8 இடங்களில் வெற்றி: வாக்குசதவீதம் 14ஆக அதிகரிப்பு

ஐதராபாத்: 2018ம் ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜ, தற்போது 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2018ல் 7 சதவீதமாக இருந்த பா.ஜ வாக்குகள் இப்போது 14 சதவீதமாக அதிகரித்துஉள்ளது. மறுபுறம் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்ட 3 எம்பிக்களும் தோல்வியை சந்தித்தனர். பாஜ எம்.பி.யும், மாநில முன்னாள் தலைவருமான பாண்டி சஞ்சய் குமார், பிஆர்எஸ் வேட்பாளர் கங்குலா கமலாகர் ரெட்டியிடம் 3,163 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நிஜாமாபாத் எம்பி ரவிந்த், பிஆர்எஸ் வேட்பாளர் கல்வகுந்த்லா சஞ்சய்யிடம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பிஆர்எஸ் வேட்பாளர் அனில் ஜாதவிடம் சோயம் பாபுராவ் எம்பி தோல்வியடைந்தார். 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சர்ச்சைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் டி ராஜா சிங் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் கோஷாமஹால் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

The post 3 எம்பிக்கள் தோற்றாலும் தெலங்கானாவில் பா.ஜ 8 இடங்களில் வெற்றி: வாக்குசதவீதம் 14ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,J8 ,HYDERABAD ,BAJA ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் திருமணம் நிச்சயமான...