×

4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு தமிழக பாஜ அலுவலகத்தில் கொண்டாட்டம்: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்

சென்னை: ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 3 மாநிலத்தில் பாஜ அமோக வெற்றி பெற் றதைதொடர்ந்து தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு கட்சியினர் நேற்று காலை முதல் வரத்தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் பாஜ துணை தலைவர்கள் சக்ரவர்த்தி, கருநாகராஜன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் 3 மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

அதேபோல தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கொண்டாட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் பட்டாசு வெடித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாநில செயலாளர் ரஞ்சித்குமார், மயிலை அசோக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்பி ரஞ்சன்குமார் தலைமையில் நடந்த கொண்டாட்டத்தில் கொண்டாட்டத்தில் அந்த வழியாக பஸ்ஸில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.

The post 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு தமிழக பாஜ அலுவலகத்தில் கொண்டாட்டம்: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Chennai ,Rajasthan ,Chhattisgarh ,Tamil Nadu BJP ,
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தனி...