×

கோயம்பேட்டில் புயல் எச்சரிக்கை எதிரொலி கட்டுப்பாட்டு அறை திறப்பு

அண்ணாநகர்: சென்னையில் இன்றும் நாளையும் காற்றுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை புயல் உருவாகும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு, நெற்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் யாரும் வீட்டை வீட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களை பாதுகாக்கவும் போலீசார் பணியில் ஈடுபட கோயம்பேடு உதவி ஆணையர் அருண் தலைமையில், கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள போலீஸ் பூத்தில் மினி காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் சுமார் 7 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’நாளை புயல் உருவாக உள்ளதால் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களை வீட்டின் அருகே உள்ள கடையில் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். நாளை காற்று வேகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழையால் பாதிப்பு இருந்தால் கோயம்பேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.

 

The post கோயம்பேட்டில் புயல் எச்சரிக்கை எதிரொலி கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annanagar ,Chennai Meteorological Department ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணாநகரில் Happy Streets நிகழ்வு...