×

சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் அதை சார்ந்த பணிகளில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ஏற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு, நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற தகுதியுள்ள நபர்களுக்கு டிசம்பர் 4ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Teacher Examination Board ,Chennai ,Dinakaran ,
× RELATED இடைநிலை ஆசிரியர் தேர்வுக்காக நாளை...