×

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது; “தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள். சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : International Day of Disabled Persons ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,International Day of Persons with Disabilities ,K. Stalin ,
× RELATED ஜனநாயகத்தையும் சம நிலையையும்...