×

ஐநாவின் சிஏசி நிர்வாக குழுவில் இந்தியா தேர்வு

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் 46வது கூட்டம் ரோமில் நடந்தது. இந்த குழுவின் நிர்வாக குழுவில் ஆசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இந்தியா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஐநாவின் சிஏசியின் நிர்வாக குழு உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்வேறு உணவு பொருள் வகைகளுக்கான சர்வதேச தரத்தை அமைக்கும் செயல்பாட்டில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐநாவின் சிஏசி நிர்வாக குழுவில் இந்தியா தேர்வு appeared first on Dinakaran.

Tags : India ,CAC Executive Committee ,UN ,New Delhi ,Organization ,for Food Safety and Standards ,United Nations ,Rome ,
× RELATED காஷ்மீர் விவகாரத்தில் தலையிட...