×

பாக். நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை டிச.8ல் வௌியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 272 உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா, “தொகுதி வரையறைகள் முடிவுற்று, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் அட்டவணை இம்மாதம் 8ம் தேதி வௌியிடப்படும்” என்று கூறினார்.

The post பாக். நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை டிச.8ல் வௌியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Islamabad ,Parliament of Pakistan ,Dinakaran ,
× RELATED விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக...