×

காங்கிரசுக்கு எதிரான பேரணியில் வன்முறை மார்க்சிஸ்ட் எம்பி, முன்னாள் எம்எல்ஏவுக்கு 1 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2014ம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது காங். அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் சட்டசபை அருகே கண்டனப் பேரணி நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடியடி மற்றும் கல்வீச்சில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ரகீம், முன்னாள் எம்எல்ஏ ஸ்வராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்பி ரகீம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஸ்வராஜ் ஆகியோருக்கு 1 ஆண்டு சிறையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

The post காங்கிரசுக்கு எதிரான பேரணியில் வன்முறை மார்க்சிஸ்ட் எம்பி, முன்னாள் எம்எல்ஏவுக்கு 1 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Congress ,MLA ,Thiruvananthapuram ,Umman Sandi ,Kerala ,Kong ,
× RELATED தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகைக்கு...