×

ஆளுநர் என்ன அவலா? புதுவை கவர்னர் தமிழிசை கேள்வி

புதுச்சேரி: எதிர்க்கட்சி தலைவர் வாய்க்கு ஆளுநர் என்ன அவலா? என்று புதுவை கவர்னர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதயநாள் நேற்று கொண்டாடப்பட்டது, இதில் புதுவையில் வாழும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பாரம்பரிய பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடினர். அப்போது கவர்னர் தமிழிசையும், அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

பின்னர் அவரிடம் அமலாக்கத்துறையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறித்து கேட்டபோது, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ இவர்கள் எல்லாம் பாஜ என கூறுகிறார்கள். அப்போ தமிழகத்தில் உள்ள போலீசாரை நான் திமுகவினர் என கூறவா? பிரச்னை ஒரு நபரிடம் இருக்கலாம், எனவே துறையை குறை கூறக்கூடாது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியது நான்தான். தனியார் கல்லூரிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா சொல்வது ஏற்புடையதல்ல. அவர் வாய்க்கு ஆளுநர் என்ன அவலா?, தொடர்ந்து மெல்லுவதை அவர் நிறுத்த வேண்டும். இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

The post ஆளுநர் என்ன அவலா? புதுவை கவர்னர் தமிழிசை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Governor ,Tamilisai ,Puducherry ,Puduwa ,Puduvai ,
× RELATED வெளியூர் பொண்ணுனு சொல்லாதீங்க ப்ளீஸ்:...