×

லஞ்ச பேரத்தில் அதிகாரி கைது: அமலாக்கத்துறையுடன் அண்ணாமலைக்கு நெருங்கிய உறவு: கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நாள்தோறும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தமிழக அரசை களங்கப்படுத்துகிற முயற்சியில் ஒன்றாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய குற்றச்சாட்டை கூறுகிற போது, அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறரா?.

அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசின் அமலாக்கத்துறை இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post லஞ்ச பேரத்தில் அதிகாரி கைது: அமலாக்கத்துறையுடன் அண்ணாமலைக்கு நெருங்கிய உறவு: கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,K. S. Alagiri ,Annamale ,K. ,Alagiri ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை