×

தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரன் ரூ.47,000ஐ தாண்டியது

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக நேற்று சவரன் ரூ.47 ஆயிரத்தை தாண்டி புதிய சாதனை படைத்தது. இஸ்ரேல், ஹமாஸ் போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர தொடங்கியது. மேலும் அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களுக்கு பிறகு பெயரளவுக்கு குறைவதுமாகவும் இருந்து வந்தது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் தங்கம் விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சில நேரத்தில் பெயரளவுக்கு குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்கப்பட்டது. மறுநாள் 29ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. 30ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அன்றைய தினம் தங்கம் விலை ஒரு சவரன் தங்கம் ரூ.46,920க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,850க்கும், சவரன் ரூ.46,800க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,915க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,320க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 29ம் தேதி தான் ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி வைத்தியம் படைத்தது. 3 நாட்களில் இந்த சாதனையும் நேற்றைய விலை முறியடித்துள்ளது மேலும் கவலையடைய செய்துள்ளது.

The post தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரன் ரூ.47,000ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Israel ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் டிராகன் பழம் சாகுபடி: எம்பிஏ பட்டதாரி அசத்தல்