×

ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர்சிங் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர் பல்பீர் சிங். கடந்த 2020 ஜூன் 30ம் தேதி அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம். நடராஜ், எஸ்வி ராஜூ, என். வெங்கட்ராமன், ஐஸ்வர்யா பாட்டி ஆகியோருடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங்கிற்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

The post ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Union State ,NEW DELHI ,General ,Balbirsing ,Union Government ,Dinakaran ,
× RELATED முதியோர்கள் நலனுக்கு வரி...