×

குஜராத்தில் 6 மாதத்தில் 1,052 பேர் மாரடைப்பில் பலி

அகமதாபாத்: குஜராத் மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 6 மாதத்தில் 1052 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் 11 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர். இவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் விளையாடும் போதும், கர்பா நடனம் ஆடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர்.

இத்தனைக்கும் இறந்தவர்களில் பலரும் உடல் பருமனுடன் சம்மந்தப்பட்டவர்களும் கிடையாது. எனவே, மாநில கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களில் மருத்துவ அவசரகாலங்களில் பயன்படக் கூடிய இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (சிபிஆர்) பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 2 லட்சம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’ என்றார்.

The post குஜராத்தில் 6 மாதத்தில் 1,052 பேர் மாரடைப்பில் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Gujarat State ,Education Minister ,Kuber Dindor ,Dinakaran ,
× RELATED தேசிய அளவிலான தடகள போட்டி வெள்ளிப்...