×

சிறார் குற்றங்களை தடுப்பது குறித்து அனைத்து துறைகளும் இணைந்து விவாதிக்க வேண்டியது அவசியம்: டிஜிபி சங்கர் ஜிவால் வலியுறுத்தல்

சென்னை: நீதித்துறை, சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து, சிறார் குற்றங்களை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வலியுறுத்தியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறார் சட்டங்கள் குறித்தான கருத்தரங்கம் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: சிறார் சட்டங்கள் குறித்த விவரங்கள், கிராமப்புற மக்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது.

சிறார்கள், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வு இன்னமும் இருப்பது கவலையாக உள்ளது. சிறுவர்கள் குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால், அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும். அரசு என்று மட்டும் இல்லாமல், சமூக அமைப்புகளும் சிறார்களுக்காக செயல்பட வேண்டியது அவசியம். நன்மையானது எது, தவறானது எது என சிறுவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தவறுகளில் ஈடுபடும் சிறார்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது இன்றியமையாதது.

நீதித்துறை, சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து, சிறார் குற்றங்களை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமானது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், தமிழ்நாடு மற்றும் கேரளா சமூக கொள்கைக்கான யுனிசெப் தலைவர் குட்லிகி லஷ்மிநரசிம்ம ராவ், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post சிறார் குற்றங்களை தடுப்பது குறித்து அனைத்து துறைகளும் இணைந்து விவாதிக்க வேண்டியது அவசியம்: டிஜிபி சங்கர் ஜிவால் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,CHENNAI ,
× RELATED போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம்...