×

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பணம் பறித்தது எப்படி?.. மணல் குவாரி அதிபர்களிடமும் ED லஞ்ச பேரமா?.. பரபரப்பு தகவல்

சென்னை: ED அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் ED அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில்; அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிந்து மருத்துவ சேவையை களங்கப்படுத்தி விடுவதாக திவாரி மிரட்டியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஹர்திக் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் அழைத்து மிரட்டியது அம்பலமாகியுள்ளது. இதனிடையே திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைதான ED அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர்.

திண்டுக்கல் மருத்துவர் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது குவாரியில் இருப்பதாக திவாரி கூறியுள்ளார். ஏற்கனவே பலரை மிரட்டி திவாரி பணம் பறித்துள்ளதால் குவாரி அதிபர்களிடமும் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை ஹவாலா மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அதிகாரி அங்கித் திவாரி கேட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச பேரம் பற்றி வெளிநபர்களிடம் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார் அங்கித்.

மதுரையில் பணிபுரிந்த ED அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மருத்துவரிடம் ஹர்திக் என்ற பெயரில் பேசியுள்ளார். ஹர்திக் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் திண்டுக்கல் மருத்துவரை அங்கித் திவாரி தொடர்பு கொண்டதற்கான ஆவணங்கள் சிக்கின

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பணம் பறித்தது எப்படி?.. மணல் குவாரி அதிபர்களிடமும் ED லஞ்ச பேரமா?.. பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,ED ,Chennai ,Dindigul government ,Dinakaran ,
× RELATED ED சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு:...