×

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ரூ.20லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரில் இருந்த கேமராவில் பதிவு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ரூ.20லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரில் இருந்த கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகாரியின் காரில் மருத்துவரின் கார் ஓட்டுநர் ரூ.20லட்சத்தை வைக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. அரசு மருத்துவர் சுரேஷ்பாபு கொடுத்த புகார் அடிப்படையில் அங்கித் திவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ரூ.20லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரில் இருந்த கேமராவில் பதிவு: முதல் தகவல் அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Chennai ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...