சென்னை: சென்னை குரோம்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த கேரள காதல் ஜோடிக்கு ஏற்பட்ட தகராறை அடுத்து காதலியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வாய்த்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் தேன்வாலா பகுதியை சேர்ந்த பௌசியா சென்னை குரோம்பேட்டை மருத்துவ கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார.
தனது சொந்த ஊரான கொல்லம் பகுதியை சேர்ந்த ஆசிக் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பௌசியாவும் ஆசிக்கும் சென்னை குரோம்பேட்டையில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது காதலி பௌசியாவை கொலை செய்த ஆசிக் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். இதை பார்த்த பௌசியாவின் சகா தோழிகள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஆசிக்கை கைது செய்தனர்.
பின்னர் பௌசியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பௌசியாவிற்கும் ஆசிக்கிற்கும் இடையே ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பௌசியாவிற்கு 16 வயது இருந்த போது திருமணம் செய்ததால் போக்சோ வழக்கில் ஆசிக் சிறை சென்றதும் தெரியவந்தது.
The post விடுதியில் தங்கியிருந்தபோது காதல் ஜோடிக்குள் தகராறில் விபரீதம்: காதலியைக் கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூரக் காதலன் appeared first on Dinakaran.
