×

டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிப்பு..!!

டெல்லி: டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. டெல்லி வந்த விமானங்கள் மோசமான வானிலையால் ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பயணம் செய்தனர். விமானம் ஜெய்ப்பூர் திருப்பி விடப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக திமுக எம்பி வில்சன் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

The post டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள்...