சீர்காழி: சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசமாகிறது. எனவே அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 250 ஏக்கரில் பொங்கல் செங்கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரும்பு மற்றும் வாழையில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பயிர்களை கடித்து நாசம் செய்கிறது. வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் காடுகளில் வசிக்கும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கரும்பு மற்றும் வாழை சோளம் பயிரிடப்பட்ட. விளைநிலங்களில் புகுந்து அவற்றைக் கடித்து வேரோடு சாய்த்து தின்று வருகின்றது.
இதனால் தங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் பயிர்களை நடவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள் அண்டை மாநிலமாக கேரளாவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுட்டுப் பிடிப்பது போல் தமிழகத்திலும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் எனது விவசாயிகள் தெரிவிக்கின்றன விவசாயிகளில் நடந்த விதி மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
