×

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை , கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம் , விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை அடையாறு, எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, சாந்தோம், மயிலாப்பூரில் மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED தென் தமிழ்நாடு, டெல்டாவில் மழை பெய்ய வாய்ப்பு