×

தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று மருத்துவ காப்பீடு முகாம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. புதியதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக நடக்கிறது.

சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்ட 5 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. மழை அதிகம் உள்ளதால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று 2000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று மருத்துவ காப்பீடு முகாம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Health Insurance ,Camp ,Dinakaran ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...