×

ஈடி இயக்குநர் ராகுல் நவீன் ஒன்றிய அரசின் கூடுதல் செயலராக நியமனம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநராக பொறுப்பு வகித்து வரும் ராகுல் நவீன் ஒன்றிய அரசின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த ராகுல் நவீன் 1993 பிரிவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை வருமான வரித்துறை அதிகாரியாவார். சர்வதேச வரிவிதிப்பு சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குராக கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் நவீன் ஒன்றிய அரசின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post ஈடி இயக்குநர் ராகுல் நவீன் ஒன்றிய அரசின் கூடுதல் செயலராக நியமனம் appeared first on Dinakaran.

Tags : ED Director ,Rahul Naveen ,Union ,New Delhi ,State ,of ,Bihar ,Dinakaran ,
× RELATED விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார...