×

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற 1300 இளைஞர்களுக்கு பனி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நான் முதல்வன்’ இளையா என்ற செயற்கை நுண்ணறிவு சார் (CHATBOT) மற்றும் அழைப்பு மையத்தினை துவக்கி வைத்து, நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம். “நீயே உனக்கு ராஜா ” என்ற திட்டத்தை அறிமுகபடுத்தி, பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி வைக்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான நான் முதல்வன் திட்டம் இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காக துவங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பெரும் நிலையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு முதலாம் ஆண்டில் 13.14 இலட்சம் மாணவர்களுக்கும். இரண்டாம் ஆண்டில் 14.9 இலட்சம் மாணவர்களுக்கும் தேவையான உயர்தொழில்நுட்ப திறன்கள் திறன்கள் அவர்கள் படிக்கும் கல்வி வளாகங்களிலேயே பயிற்றுவித்து வளர்ந்து விரிந்துள்ளது. உயர்கல்வி பாடத்திட்டத்தில் புதுமையான தொழில்நுட்பங்களை பெரும்பான்மையான மாணவர்களுக்கு பயிற்றுவித்து, முன்னணி நிறுவனங்களில் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு என உயர்கல்வியில் மலர்ச்சி தந்து புரட்சியையும் படைத்துக் கொண்டிருக்கிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்ட இளையதளம் செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி தேவை சார்ந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து வழிகாட்டும் இளையா என்ற chatbot. மற்றும் திறன் பயிற்சி சார்ந்த தகவல்கள் பெற்று கொள்ளும் பொருட்டு 044- 25252626 என்ற உதவி எண் IVRS ஒருங்கிணைந்த அழைப்பு மையத்துடன் கூடிய தளத்தை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலிருந்து வேலைவாய்ப்பு வேண்டி எந்த இளைஞர் அழைத்தாலும், அவர்களுக்கு பொருத்தமான திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அவர்களின் மாவட்டம் அல்லது அருகாமையில் உள்ள மாவட்டங்களில் கண்டறிந்து இந்த இளையதளம் சார்ந்த அழைப்பு மையமானது அவர்களுக்கு சரியாக வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களுக்கு ஆட்தேர்வு. உரிய திறன் பயிற்சி, முடிவில் Cúi (Recruit Train and Deploy Model) திட்டத்தின் வாயிலாக ஜான்சன் எலெக்ட்ரிக், போஸ் லிமிடெட், என்எல்சி, இந்தியா, நெட்டூர் டெக்னிகல் ட்ரெய்னிங் பவுன்டேஷன் நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு அமைச்சர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.

தொன்மையும் மரபும் அழகுக்கலை நயமும் பொதிந்த தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை காக்கும் வண்ணம் அழிந்து வரும் மரபுசார் கைவினைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும், கலை ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஈர்த்து கலை தொழில்முனைவோராக உருவாக்கும் முயற்சியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக “நீயே உனக்கு ராஜா என்ற திட்டத்தை அறிமுகபடுத்தி மூன்று பயனாளிகளுக்கு தஞ்சாவூர் சிற்பக்கலை மற்றும் தலையாட்டி பொம்மை மற்றும் மர சிற்பங்கள் செய்ய தேவையான கைவினை பெட்டகங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்..

கள்ளக்குறிச்சியில் மரவேலைப்பாடு கலைத்திறன் பயிற்சி, தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மை, பித் வேலை மற்றும் தஞ்சாவூர் ஓவியம் போன்ற கலைத்திறன் பயிற்சிகள், இராமநாதபுரத்தில் பனை ஓலை கலைத்திறன் பயிற்சிகள், தூத்துக்குடியில் கடல் சிப்பி கலைத்திறன் பயிற்சிகள், மதுரையில் களிமண் மற்றும் காகிதம், மட்பாண்டம், கைகாட்டுச்சாயம் போன்ற கலைத்திறன் பயிற்சிகள், திருநெல்வேயிலியில் பத்தமடைப் பாய் மற்றும் மட்பாண்டம் கலைத்திறன் பயிற்சிகள், அந்தந்த மாணவட்டங்களிலேயே அதற்கேற்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது மாதம் உதவி தொகையாக ரூ.12500, பயிற்சிக்கான கருவிகள், STARTUP TN உடன் இணைந்து பொருத்தமான இன்குபேட்டர்களை கண்டறிதல், அனுபவம் வாய்ந்த வழிகாட்டுதல், TANSEED நிதி ரூபாய் 15 இலட்சம் வரை பங்கு முதலீடு, ஏற்றுமதி திறன், அரசாங்க உதவியுடன் வங்கி கடன். மானியம் மற்றும் பலவற்றை அளித்து தகுதிவாய்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களை ளை தொழில்முனைவோராக மாற்றும் பொருட்டு வழங்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் கண்டறியப்பட்ட சிறந்த ஆட்சேர்த்தல் மற்றும் பணியமர்த்தும் நிறுவனங்கள் மூலமாக பணிவாய்ப்பு பெற்ற 5500 நபர்களில் 300 இளைஞர்களுக்கும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக் தீன் தயால் உபாத்யயா கிராமின் கல்யாண் யோஜனா (DDUGKY) திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற 1000 இளைஞர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பணி நியமனஆணைகள் வழங்கினார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அளித்த திறன் பயிற்சிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,01,994 நபர்கள் பயிற்சி பெற்று அவர்களில் 96,856 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட இளைஞர் திருவிழாக்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்பை பெற்ற 1300 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் பயிற்சி திட்டம் ஆகியவற்றின் மூலம், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் இளைஞர்கள், பல்வேறு தொழில்துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.. இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் திருவிழாவின் மூலம் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர். ப.செந்தில்குமார், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் மருத்துவர். தாரேஸ் அஹமத்,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஜெ.இன்னசென்ட் திவ்யா. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலர் ஜெயபிரகாசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்

The post தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற 1300 இளைஞர்களுக்கு பனி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Tamil Nadu Skills Development Corporation ,CHENNAI ,Udayaniti Stalin ,Dinakaran ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...