×

என்சிசி சிறப்பு முகாமில் நீர்நிலைகளை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்

காரைக்குடி, டிச.1: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் கல்லுப்பட்டி, புலிக்குத்தி கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்யும் சிறப்பு முகாம் நடந்தது. தேசிய மாணவர் படை இணை அதிகாரி கவியரசு வரவேற்றார். முதல்வர் முனைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

கல்லூரி தாளாளர் முனைவர் சேதுகுமணன் துவக்கி வைத்தார். கிராமப்புறங்களில் உள்ள குளம், கண்மாய் போன்றவற்றை மாணவர்களை சுத்தம் செய்தனர். நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்பது குறித்து கிராமமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்சிசி பயிற்சியாளர் வினய் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்சிசி படை தலைவி யோகலட்சுமி நன்றி கூறினார்.

The post என்சிசி சிறப்பு முகாமில் நீர்நிலைகளை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : NCC ,Karaikudi ,Visalayankot Kalamkavi ,Sethubaskara Agricultural College ,Research Institute ,Dinakaran ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்