×

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கோயம்பேடு உதவி ஆணையர் அருண் உத்தரவின்படி தனிப்படையினர் நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நெற்குன்றம் மேட்டுகுப்பம் பகுதியில் சுற்றித் திரிந்த நெற்குன்றம் ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஈஸ்வர் (எ) ஈஸ்வரன்(24), சஞ்சய் (எ) கொரில்லா (20), கவுதம் (20), அஜய் (எ) வெள்ளை அஜய் (21), மதன்ராஜ் (21) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அப்பகுதியில் போதை மாத்திரை விற்றது தெரிந்தது.

விசாரணையில், இவர்கள் புனேவுக்கு சென்று 10 போதை மாத்திரைகளை ரூ.380 வீதம் 100 மாத்திரைகளை வாங்கி வந்து, இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து ஒரு மாத்திரை ரூ.300 வீதம் 10 மாத்திரைகள் ரூ.2,600க்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 56 போதை மாத்திரைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Instagram ,Annanagar ,Koyambedu ,Nelkukunram ,Assistant Commissioner ,Dinakaran ,
× RELATED பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர்கள் கைது