×

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூறாவது வயதில் கனெட்டிகட்டில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று காலமானார். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்டு போர்ட் ஆட்சி காலத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். அப்போது சர்வதேச விவகாரங்களில் அசாதாரணமான செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சர் என மொத்தம் 8 ஆண்டுகள் அமெரிக்க உயர்பதவியில் இருந்தார்.

The post அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former ,US ,Secretary of State ,Washington ,Henry Kissinger ,Connecticut ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு...