×

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாகச் செயல்பட்டு அதனை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் விரைவாகச் செயல்பட்டு தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 வாரங்களுக்கும் மேல் விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. பருவமழை பலமாக பெய்து வரும்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அடுத்தடுத்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்துள்ளது. அந்தவகையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. நேற்று மாலையில் மீண்டும் துவங்கிய மழை, இரவெல்லாம் வெளுத்து வாங்கியது.

இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.. கனமழை: கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், அதில் 68 இடங்களில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அந்தவகையில், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும், 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாகச் செயல்பட்டு அதனை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாகச் செயல்பட்டு அதனை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...