×

கோவை நகை கொள்ளை: குற்றவாளி அடையாளம் தெரிந்தது: ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: கோவை நகை கொள்ளை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நடந்த 200 சவரன் நகை கொள்ளை வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் தருமபுரி இளைஞர் விஜய் தனது மனைவியுடன் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார். நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் விஜய் என்பவரின் மனைவியிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

 

The post கோவை நகை கொள்ளை: குற்றவாளி அடையாளம் தெரிந்தது: ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Commissioner ,Balakrishnan ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை கோயில் கட்டணச்சீட்டு...