×

இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறினால் அம்பானி, அதானிக்கு தானே தவிர 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல: கே.எஸ் அழகிரி விமர்சனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 2011ம் ஆண்டு 35வது இடத்தில் வளர்ச்சிப் பாதையில் இருந்த இந்தியா, இன்று 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறியிருக்கிறார். மே 2014ல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது. 2023 இல் ரூபாய் 82.71 ஆக சரிந்து 40 சதவிகித மதிப்பு குறைந்துள்ளது. 2014 இல் வங்கியில் ரூபாய் 100 டெபாசிட் செய்திருந்தால் இன்றைய மதிப்பு ரூபாய் 60 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மக்கள் அடைந்த பாதிப்பை அண்ணாமலையால் அறிய முடியுமா ? அரசியல் உள்நோக்கம் கொண்டு அமலாக்கத்துறை செயல்படுவதால் தான் மணல் குவாரி குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இன்றைக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வராத நிலையில் பிரதமர் மோடி அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆளுநர்கள் என கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறார்.

இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார். இதற்கான பாடத்தை ஐந்து மாநில தேர்தலில் மோடி பெறப் போகிறார். இதற்கு பிறகும் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறினால் அத்தகைய வளர்ச்சி அம்பானி, அதானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களுக்கு தானே தவிர, 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறினால் அம்பானி, அதானிக்கு தானே தவிர 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல: கே.எஸ் அழகிரி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : India ,KS ,Chennai ,Tamil Nadu Congress ,President ,KS Alagiri ,Tamil Nadu BJP ,Annamalai ,Ambani ,Adani ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்