- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- வானிலை மையம்
- வங்காள கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை,வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
