×

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கு: அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்தில் அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சட்ட-ஒழுங்கு பிரச்சனை காரணமாக அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ஜுன் சம்பத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் இந்த வழக்கு பொய்யாக தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அரசு தரப்பில் ஆராஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும், தலைவர்கள் சிலையை சேதப்படுத்துவது போன்ற செயல்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது அரசு தரப்பில் கூறப்பட்டது. திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது, 7 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தாப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வழக்கறிஞர் அன்புநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

The post ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கு: அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Srirangam ,Arjun Sampath ,Madurai ,Court ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தி.வி.க. கண்டனம்..!!