×

முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர், நவ. 29: திருவாரூர் மாவட்கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களுக்கு தேவைப்படும் பயிற்சியின் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04366-290080 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,District ,Collector ,Saru ,Dinakaran ,
× RELATED மன்னார்குடியில் 21ல் உங்களை தேடி...