×

50 பாலஸ்தீன பெண் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம்

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டு, இன்றுடன் முடிவடைகிறது. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில், நேற்று முன்தினம் வரை ஹமாஸ் படையினர் 69 பணயக் கைதிகளை விடுவித்தனர். அதே போல், இஸ்ரேல் 150 பாலஸ்தீனர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில், 2-வது கட்டமாக அதன்படி, ஹமாஸ் படை நாளொன்றுக்கு 10 இஸ்ரேலியர்களை விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் 50 பாலஸ்தீன பெண் கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரிய வரும்.

The post 50 பாலஸ்தீன பெண் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் appeared first on Dinakaran.

Tags : Israel ,JERUSALEM ,Hamas ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா