×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை காப்பற்றிய மீட்புக் குழுவிற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

* ஜனாதிபதி முர்மு:

தொழிலாளர்களின் மன உறுதிக்கு தேசம் தலைவணங்குகிறது; 17 நாட்களாக தொழிலாளர்கள் சந்தித்த தடைகள் மனித சகிப்புத் தன்மைக்குச் சான்றாகும் நம்பமுடியாத மனஉறுதியுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துகிறேன்.

* பிரதமர் மோடி:

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்ட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்.

* அமித்ஷா

உத்தர்காசியில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நமது 41 ஷ்ராமிக் சகோதரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது நாட்டுக்கு பெரும் செய்தி. நீண்ட காலமாக சுரங்கப்பாதையில் இத்தகைய சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட அவர்களின் துணிச்சலுக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது. நமது சக குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற அயராது முயற்சி செய்த அனைத்து மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

* மல்லிகார்ஜுன் கார்கே

கடந்த 17 நாட்களாக உத்தர்காசி மாநிலம் சில்க்யாராவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இன்று பத்திரமாக சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது நம் அனைவருக்கும் மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையாலும், என்டிஎம்ஏ உட்பட அனைத்து ஏஜென்சிகளாலும் இத்தனை நாட்களாக நடந்து வரும் ஆபரேஷன், இறுதியாக வெற்றியடைந்தது, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

* உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி:

சவாலான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. மீட்புப்பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து முடிந்துள்ளது; இயந்திரங்கள் பழுதான சூழலிலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்படவில்லை

* ஆளுநர் ஆர்.என்.ரவி:

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதில் நாடு மகிழ்ச்சி கொள்கிறது
அயராது செயல்பட்ட மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம்.

* புதுச்சேரி ஆளுநர் தமிழசை

உத்தரகாண்ட் மாநிலம்,உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும். ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும். என்று நிரூபித்த இந்திய தொழில்நுட்பத்திற்கும்,தொழில்நுட்ப விஞ்ஞானிகள்,மத்திய, மாநில அரசுகள்,தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை காப்பற்றிய மீட்புக் குழுவிற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,President ,Murmu ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...