×

திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் மஸ்தான் அணிவித்தார்.

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் மஸ்தான் அணிவித்து குழந்தைகளை வாழ்த்தினார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகிறது.

இதேபோல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 12 குழந்தைகளுக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கவுன்சிலர் சந்திரன் ஏற்பாட்டில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, வாழ்த்தினார்.

பின்னர் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாநில பொது உறுப்பினர் கதிரேசன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் அசோகன், நகர செயலாளர் கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், மருத்துவர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் மஸ்தான் அணிவித்தார். appeared first on Dinakaran.

Tags : Minister Mastan ,Udayaniti Stalin ,Dindivanam ,Minister ,Mastan ,Dindivanam Government Hospital ,Mustan ,Dindivana ,
× RELATED அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்