சென்னை: மணல் குவாரிகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரிகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி 5 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 10 அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஆட்சியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப்பெறலாம் ஆனால் சம்மன் அனுப்ப முடியாது என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 5 மாவட்ட ஆட்சியர்கள் 3 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
The post மணல் குவாரிகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
