×

பாஜவில் சேர்ந்த பாதிரியார் சர்ச் பொறுப்பிலிருந்து உடனடி நீக்கம்

திருவனந்தபுரம்: இடுக்கியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பாதிரியார் சர்ச் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் குரியாக்கோஸ். இவர் இடுக்கி மறை மாவட்டம் மங்குவா செயின்ட் தாமஸ் ஆலயத்தின் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு இடுக்கி மாவட்ட பாஜ தலைவர் அஜி உறுப்பினர் அட்டை வழங்கினார். பாதிரியார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தது இடுக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடுக்கி மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பாதிரியார் குரியாக்கோஸ் மங்குவா கிறிஸ்தவ ஆலயத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

The post பாஜவில் சேர்ந்த பாதிரியார் சர்ச் பொறுப்பிலிருந்து உடனடி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Bajaj Church ,Thiruvananthapuram ,Bharatiya Janata Party ,Idukki ,Idukki, Kerala ,BJP ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...