
ஜெய்ப்பூர்: கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்து விட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய மோடி; கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்து விட்டது. ராஜஸ்தானை சூறையாடுவதில் காங்கிரஸ் எதையும் விட்டு வைக்கவில்லை.
குற்றங்கள் தொடர்பான பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவாகி உள்ளன. நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நான் வேதனை அடைகிறேன், ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் இதை ஒரு பாரம்பரியமாக ஆக்கியுள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு பெண்ணும், மகளும் பாஜக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வரும் என பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் முதல்வர் கெலாட்.
ராஜஸ்தானில் பாஜகஆட்சி அமைந்தபின் தனது ஆட்சிக்கால திட்டங்களை நிறுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிரியாவிடைக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளதை கெலாட் அறிவார். பாஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, வினாத்தாள் கசிவு தடுத்து நிறுத்தப்படும் என ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவோம். கலவரத்தை தடுத்து நிறுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம்.
இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். நாட்டில் தற்போது அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சனையால் ஆற்று நீரைக்கூட பங்கிட முடியாத நிலை உள்ளது; தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ராஜஸ்தானுக்கு உரிய நீரை நீதிமன்ற தலையீடு இல்லாமலேயே பகிர்ந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
The post கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்து விட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.