×

மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு: இடிபாடுகளில் சிக்கிய 30 பேரை தேடி மீட்கும் பணி தீவிரம்!

மெக்சிகோவில் உள்ள ஆலயத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்து வழிபாட்டில் கலந்துகொண்டவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு மெக்சிகோவில் உள்ள ஆலயத்தில் மேல் சுவர் நேற்று பிரார்த்தனையின் போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் வழிபாட்டில் கலந்துகொண்ட பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதாக தெருவிக்கப்பட்டது.

அவர்களை மீட்கும் பணியில் தன்னார்வர்களுடன் சேர்ந்து ராணுவத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இடிபாடுகளில் சிக்கியவர்களின் சத்தத்தை துல்லியமாக அறிந்து அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்கும் வகையில் அங்கிருந்தவர்களை பாதிரியார் அமைதி படுத்தினார். அவரது அறிவுரைக்கு இணங்க அழுதுகொண்டிருந்த பலர் கைகளை மேல் உயர்த்தி ஒற்றுமையை காண்பித்து அமைதி படுத்தினர்.

The post மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு: இடிபாடுகளில் சிக்கிய 30 பேரை தேடி மீட்கும் பணி தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Mexico ,northern Mexico ,
× RELATED மெக்சிகோவில் சர்வதேச ஹாட் ஏர் பலூன்...