×

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாள்: நினைவிடத்தில் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 02ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தி அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா தலைவர் ஓம் பிர்லா, டெல்லி கவர்னர் சக்சேனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாள்: நினைவிடத்தில் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Troupati Murmu ,Modi ,Malligarjune Karke ,Delhi ,Troubati Murmu ,Mallikarjune Karke ,Dinakaran ,
× RELATED மகாத்மா காந்தி மகாபுருஷர் நரேந்திர...