×

அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடைசி நேரத்தில் மசோதா நிறைவேற்றம் முடங்கும் நிலையில் இருந்து தப்பியது

வாஷிங்டன்: அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதால் அரசாங்கம் முடங்கும் நிலை தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவில் அரசு பணிகளுக்கான செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கும் வகையில் அவ்வப்போது, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். நேற்றுமுன்தினம் வரைக்கான நிதிக்கு மட்டும் ஒப்புதல் இருந்தது. நவம்பர் 17 வரைக்கான செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் செனட் சபையில், மசோதா நிறைவேறினாலும், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறுவதில் இழுபறி நிலவியது.பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, நிதி ஒதுக்க ஆதரவு தெரிவித்தாலும், குடியரசு கட்சி எம்பி.க்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்தனர்.

சனிக்கிழமை நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது. புதிதாக நிதி அனுமதிக்கப்படாதபட்சத்தில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பணிகள், அலுவலகங்கள் அக்டோபர் 1 ம் தேதி (நேற்று) முதல் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. அரசு நிர்வாக பணிகள் முடங்காமல் இருக்க அதிபர் ஜோ பைடன் தற்காலிக நிதி மசோதாவில் நேற்றுமுன்தினம் மதியம் கையெழுத்திட்டார். அதை தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் மசோதா நிறைவேறியது. 88 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 9 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். பேரிடர் நிதி உதவிக்கான தொகை ரூ.1.3 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனுக்கு அளிக்கும் நிதி உதவி கைவிடப்பட்டுள்ளது.

The post அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடைசி நேரத்தில் மசோதா நிறைவேற்றம் முடங்கும் நிலையில் இருந்து தப்பியது appeared first on Dinakaran.

Tags : U.S. government ,WASHINGTON ,US government ,House ,United States ,Dinakaran ,
× RELATED சீன அமைச்சர் மரண விவகாரத்தில்...