×

பெங்களூருவில் நடைபாதையில் நடந்து சென்றபோது நடிகரின் கார் மோதி பெண் பலி

பெங்களூரு: பெங்களூருவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது நடிகரின் கார் மோதியதில், அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் கன்னட நடிகர் நாகபூஷணா என்பவர் தனது கார், உத்தரஹல்லியில் இருந்து கோணனகுண்டே நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வசந்தபுரம் வழியாக சென்ற போது நடைபாதையில் நடந்து சென்ற தம்பதிகள் மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் 48 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு நடிகர் நாகபூஷணாவே அழைத்துச் சென்றார். ஆனால் அந்தப் பெண்ணின் கால்கள், தலை, வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் நாகபூஷணா மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெங்களூருவில் நடைபாதையில் நடந்து சென்றபோது நடிகரின் கார் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Bengaluru ,
× RELATED கர்நாடக தலைநகர் பெங்களூருவில்...