×

குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

டெல்லி: குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுலா பேருந்து விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

The post குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Gunnur ,Delhi ,PM Modi ,South Kasi District Potalpadur ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களின் பங்கு தனிநபர்களை...