×

கைதிகளுக்கு செல்போன் சிறை காவலர் சஸ்பெண்ட்

கோபி: கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 கைதிகளிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், இயர்போன் பறிமுதல் செய்த வழக்கில் இரண்டாம் நிலை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோபியில் உள்ள மாவட்ட சிறையில், அடிதடி வழக்கில் கைதாகி அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணபதிசிங் (45) ஆகியோர் செல்போன் வைத்து இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோபி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். விசாரணையில், மாவட்ட சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நம்பியூர் அருகே எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சரவணக்குமார், கைதிகளுக்கு செல்போன் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கைதிகளுக்கு செல்போன் சிறை காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Prison guard ,Gobi ,Prison ,Dinakaran ,
× RELATED கோபி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை