×

ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி… 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி வீர நடை போட்டுள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 34 பதக்கங்களை கைப்பற்றி உள்ள நிலையில் அதில் பாதிக்கு மேலான பதக்கங்கள் துப்பாக்கிசூடுதலில் கிடைத்துள்ளன. இந்நிலையில், போட்டியின் 7 நாளான இன்று காலை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் சரப்ஜோத் சிங் – திவ்யா ஜோடி தங்கத்துக்காக சீனாவுடன் பலப்பரீட்சை நடத்தினர். கடைசி வரை பரபரப்பாக நீடித்த போட்டியில் இந்தியா 14/16 என்று தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இதனால் கிடைத்த வெள்ளை பத்தக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா இருக்கிறது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை அறுவடை செய்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி… 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Beijing ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவின்...