×

பூதப்பாண்டி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பூதப்பாண்டி, செப்.30 : ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த சொகுசு டெம்போ டிராவலர் வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியையும், அதை கடத்த பயன்படுத்திய சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

The post பூதப்பாண்டி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bhootapandi ,Flying Squad ,Tahsildar Sureshkumar ,Vellamadam Kristanagar ,Aralwaimozhi ,
× RELATED போக்சோ வழக்கில் கைதான கைதி தப்பியோட்டம்; 2 தனிப்படைகள் அமைப்பு